{"product_id":"ebook-ரமண-பெரிய-புராணம்-பாகம்-2","title":"eBook - ரமண பெரிய புராணம் (பாகம் 2)","description":"\u003cp class=\"p1\"\u003e'ரமண பெரிய புராணம்' என்பது\u003cspan class=\"Apple-converted-space\"\u003e  \u003c\/span\u003eபகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் பக்தர்களில் 75 அணுக்கத் தொண்டர்களின் அத்யாத்ம வாழ்க்கையைக் கூறும் அரிய நூலாகும். இந்நூல், பகவானுடன் மிக அணுக்கமாக இருந்த\u003cspan class=\"Apple-converted-space\"\u003e  \u003c\/span\u003eபக்தர்களின் ஆத்மார்த்தமான அனுபவங்களின் வாயிலாக ரமண பகவானின் மௌனத்தின் காம்பீர்யத்தை, அவரது ஸாந்நித்ய மஹிமையை நம் கண் முன்னே உயிர்ப்புடன் கொண்டு வரும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003eதலைசிறந்த சிவ பக்தர்களின் வாழ்க்கையை விவரித்துக்கூறும் பண்டைய தமிழ் காவியமான பெரிய புராணத்தால் ஈர்க்கப்பட்டு,\u003cspan class=\"Apple-converted-space\"\u003e  \u003c\/span\u003eஆரம்பகாலத்தில் ரமண மஹர்ஷியுடன் இருந்த 75 பக்தர்களின் வாழ்க்கையைக் கூறுகிறது. அந்த மஹாத்மாக்களை, எங்கோ தொலைவில் இருப்பவர்களாக அல்லாமல், பகவானின் ஸாந்நித்யத்தால் செதுக்கப்பட்டு, புனிதமாக்கப்பட்டு அருணாச்சலத்தில் வாழும் \"பாறைகளாகவும் கற்களாகவும்\" சித்தரிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003eஇந்நூல் உபதேசத்தை பிரகாசப்படுத்துவது மட்டுமல்லாமல், குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே நிலவிய புரிதலின் அடிப்படையிலான திவ்ய உறவையும், ஆத்மவிசாரம், சரணாகதி, அருள்சக்தி இவற்றைக் குறித்த ஸூக்ஷ்மமான விஷயங்களையும், ஒரு ஸாதகனில் நிகழும் உண்மையான உருமாற்றத்தையும், எவ்வாறு பண்டிதர்கள், கிருஹஸ்தர்கள்,\u003cspan class=\"Apple-converted-space\"\u003e  \u003c\/span\u003eதுறவிகள் மற்றும் வெளிநாட்டினர் என்று பலதரப்பட்ட மக்களும் ஒரே ஸத்யவஸ்துவை நோக்கி ஈர்க்கப்பட்டதையும் எடுத்துக்கூறுகிறது.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003eஅணுக்கத் தொண்டர்கள் பகவானிடம் வந்த காலவரிசையின் அடிப்படையில் தனிச்சிறப்புடன் அமைந்துள்ள இந்நூல், ரமண மஹர்ஷியைச் சுற்றிலும் ஒரு அத்யாத்ம\u003cspan class=\"Apple-converted-space\"\u003e  \u003c\/span\u003eசமூகம் எவ்வாறு உருவானது என்பதை விவரிக்கிறது; மேலும், அவரது உபதேசங்களைப் பாதுகாப்பதிலும், அதை எல்லோரும் அறியும்வண்ணம் செய்வதிலும் ஒவ்வொரு பக்தரும் எவ்வாறு பங்களித்தனர் என்பதையும் விவரிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003eகதைகளின் தொகுப்பாக மட்டுமில்லாமல்,\u003cspan class=\"Apple-converted-space\"\u003e  \u003c\/span\u003eஇது அகத்தில் நிகழும் தீர்த்தயாத்திரையாகும். இதை வாசிப்பது அருணாச்சலத்தின் உள் கிரிவலப்பாதையில் நடப்பதற்கு ஒப்பாகும்; அதில் ஒவ்வொரு பக்தரும் ஹ்ருதய-மையத்தைச் சுட்டிக்காட்டும் மௌன வழிகாட்டியாகிறார்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇந்நூல் வாசகரின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமில்லாமல், அகமுகமாக ரமணரின் உண்மையான உபதேசம் தொடர்ந்து பிரகாசிக்கும் மௌனத்திற்குள் பிரவேசிக்கச் செய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003e \u003c\/p\u003e","brand":"Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust","offers":[{"title":"Default Title","offer_id":52950765044028,"sku":null,"price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/files\/01_RPP_Tam_Vol2_v2.png?v=1775291952","url":"https:\/\/www.voiceofrishis.org\/products\/ebook-%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2","provider":"Voice of Rishis","version":"1.0","type":"link"}