Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust

ஆத்மதீர்த்தம் - ஸ்ரீ சங்கராசார்யரின் திவ்ய வாழ்க்கை சரித்திரமும் உபதேசங்களும் (இது ஒரு ஸ்வதந்திரமான வேதாந்த காவியம்)

No reviews
Price: ₹ 550.00

ஆத்மதீர்த்தம் என்பது இந்து சமயத்தின் தலைசிறந்த ஆசார்யரான ஸ்ரீசங்கர பகவத்பாதரின் வாழ்க்கையையும் உபதேசங்களையும் பிரகாசப்படுத்தும் ஒரு திவ்ய கிரந்தமாகும். இது வழக்கமாக சொல்லப்படுகின்ற வாழ்க்கை வரலாறு கதையல்ல; இது ஒரு அற்புதமான, தனித்துவமான வேதாந்த காவியம். ஆசார்யரின் திவ்ய சரித்திரத்தை எடுத்துச் சொல்வது, ஆழமான அத்யாத்ம உள்ளுணர்வைப் பிரகாசிக்கச் செய்து, பாதையை ஒளிரச் செய்கின்றது. உபதேசங்களின் மஹிமையும், ஆசார்யரின் பெருமையும் ஆழ்ந்த அமைதியை அருளி,  நம் நிஜ ஸ்வரூபத்தைக் காட்டித்தருகிறது.

இந்த கிரந்தத்தின் வாயிலாக, வேதாந்தம் மற்றும் அத்யாத்ம ஸாதனை குறித்து ஒரு உண்மையான ஸாதகனின் ஹ்ருதயத்தில் எழும் சந்தேகங்கள் மிகுந்த கனிவோடு தெளிவுபடுத்தப்படுகின்றன. பக்தியோடு இந்த கிரந்தத்தை வாசிப்பவர், அனுபூதிமானான ஆசார்யருடன் கேரளாவிலிருந்து கேதாரம் வரை, தீர்த்த யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுகிறார். இத்தகைய தெய்வீக வாழ்க்கையை ஆழ்ந்து மனனம் செய்வதால், ஒருவனுக்குள் பக்தி, ஞானம் மற்றும் வைராக்கியம் மிகஇயல்பாக மலரும்.

இந்த கிரந்தத்தில் ஆசார்யரின் திவ்ய சரித்திரம் புதுப் பொலிவோடு  சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும், வரலாற்று விபரங்களை விட, ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்னும் உன்னதமான லட்சியமே எப்போதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இது உண்மையில், ஆன்மீக இந்தியாவின் கதை—ஸனாதன தர்மத்தின் கதை.

ஆழ்ந்த ஈடுபாட்டையும் பக்தி உணர்வையும் மேம்படுத்தும் வகையில்  இந்த கிரந்தத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கதைப்பகுதியானது, காலத்தைத் தாண்டிப் பிரகாசிக்கும் ஆசார்யரின் உபதேசங்கள் மற்றும் திவ்ய ஸ்லோகங்களுடன், மிகநேர்த்தியாக பின்னிப் பிணைந்துள்ளது. இது வாசகரை, புத்தகம் வாசிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசார்யரின் பவித்ரமான, அற்புதமான வாழ்க்கையில் மானஸீகமாக பங்கேற்கச் செய்கிறது.

இந்த கிரந்தத்தை, இந்து சமயத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும்  பெருமையுடன் படிக்க வேண்டும். இது, இனி வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் திறன் கொண்ட உன்னதமான, அர்த்தமுள்ள பரிசாகும்.

Available in English, Malayalam, Hindi, Tamil, Kannada, French and Swedish.

Price includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.

Currently shipping only within India.

For bulk orders, either place multiple orders or contact us at publications@voiceofrishis.org